கத்தார் தேசிய கொவிட் 19 தடுப்பூசி மத்திய நிலையத்தின் பணி நேரங்களில் மாற்றம்!

கத்தார் தேசிய கொவிட் 19 தடுப்பூசி மத்திய நிலையத்தின் பணி நேரங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கத்தார் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. 

அதன்படி இன்று முதல் கத்தார் தேசிய தடுப்பூசி நிலையம், இரண்டு ஷிப்ட்களாக இயங்கவுள்ளது. முதல் ஷிப்டின் படி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையும், இரண்டாவது ஷிப்டின் படி இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும் திறந்திருக்கும் என்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

கத்தார் தேசிய COVID-19 தடுப்பூசி திட்டத்தின் படி இதுவரை 36.9 சதவீதமான பெரியவர்களுக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியேனும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply