கத்தார் தனியார் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனை செய்ய எவ்வளவு தெரியுமா!

கத்தாரில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு ஆரம்ப சுகாதார மருத்துவ நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், PCR பரிசோதனைகளுக்கு அதிகாரமளிக்கப்பட்ட வைத்தியசாலைகளின் பெயர் விபரங்களை கத்தார் சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது. 

என்றாலும் PCR பரிசோதனைக்கான கட்டணம் எவ்வளவு என்பதாக வெளிப்படையாக செய்திகளில் வெளியாகவில்லை. என்றாலும் தனியார் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைக்கான விளம்பரங்களை தங்களது சமூக வலைதளங்கள் ஊடாக விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ளன. 

அதன் படி, கத்தாரின் தனியார் வைத்தியசாலையான Aster Medical Center தனது இணைய தளத்தில் PCR பரிசோதனைக்கான கட்டணம் தனிநபரொருவருக்கு 400 கத்தாரி றியால்கள் என்பதாக தெரிவித்துள்ளது. என்றாலும் அனுமதியளிக்கப்பட்ட அனைத்து வைத்தியசாலைகளில் 400 றியால்களாக இருக்கும் என்று உறுதியாக கூற முடியாது. கட்டணங்கள் வைத்திசாலைக்கு வைத்தியசாலை வேறுபடலாம்.

Aster Medical Center வைத்திய சாலையின் விளம்பரத்திற்கு இங்கு செல்க – Advertisement 

Leave a Reply