Indian News
LULU குழும உரிமையாளர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது!

LULU குழுமத்தில் உரிமையாளர் பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை விபத்தில் சிக்கியதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. உரிமையாளர் யூஸுப் அலி, அவரது மனைவி மற்றும் மூன்று பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. என்றாலும் விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையெனவும், விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் கண்காணிப்பில் உள்ளதாகவும், இந்தியாவின் ஹின்ந் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கத்தார் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் LULU Supermarkets, LULU Hypermarket, மிகவும் பிரபல்யமானது. மேற்படி லூலூ குழுமத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பணி புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.