கத்தாரில் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோன தடுப்பூசி பெற முடியும் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

கத்தாரில் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோன தடுப்பூசி பெற முடியும் என்பதாக கத்தார் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கத்தாரில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட ஆரம்பித்த போது சுகாதார ஊழியர்களுக்கும், 60க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன. பின்னர் கொரோனா வைரசுக்கெதிரான தடுப்பூசிக்கான வயதெல்லை 40ஆக குறைக்கப்பட்டது. 

தற்போது கத்தாரில் ஒரு நாளைக்கு குறைந்து 25 ஆயிரம் தடுப்பூசிகள், கத்தாரில் அமைந்துள்ள 35 நிலையங்களில் வழங்கப்படும் வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான வயதெல்லையை 35 ஆக கத்தார் சுகாதார அமைச்சு குறைத்துள்ளது. கத்தாரில் இதுவரை 1,200,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரிவு படுத்தும் நோக்கில் வயதெல்லையை 35 ஆக குறைத்துள்ளதாக கத்தார் ஹமத் வைத்தியசாலையின் தொற்று நோய்ப்பிரிவுத் தலைவர் Dr Abdullatif Al Khal தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *