Sri Lanka
கத்தாரிலிருந்து இலங்கைக்கு வாரமொன்றிற்று 6 விமானச் சேவைகள்! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு!

கத்தாரிலிருந்து இலங்கைக்கு வாரமொன்றிற்கு 6 விமானச் சேவைகள் நடாத்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. கத்தாரின் டோஹா நகரிலிருந்து இலங்கையின் கொழும்பு நகரிற்கு நேரடி விமானச்சேவையாக இது அமையப்பெறவுள்ளது.
Economy Classயில் விமான டிக்கட்டுக்களை புக்கிங் செய்கின்ற போது 45 கிலோ பயணிப் பொதிக்கான சலுகையும், Business Classaயில் டிக்கட்டுக்களை கொள்வனவு செய்யும் போது 50 கிலோ பயணிப் பொதிக்கான சலுகையும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு கததாரில் இலங்கை விமானச் சேவை காரியாலயத்தை தொடர்பு கொள்ள முடியும். தொடர்பு இலக்கங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
