வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களால் கொரோனா, தொற்று அதிகரிக்கும் அபாயம் – இராணுவத் தளபதி

வௌிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் மூலம் நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வௌிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களில் 78 பேருக்கு நேற்றைய தினம் (16) COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர்கள் நேற்று முன்தினம் (15) நாட்டிற்கு வருகை தந்தவர்களெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 237 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்ட நிலையில், அவர்களில் 159 பேர் உள்நாட்டினர் என்பதுடன், ஏனைய 78 பேரும் வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்களென இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் நாளாந்தம் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்படும் தற்போதைய சந்தர்ப்பத்தில், இலங்கையில் COVID நோயாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய பின்புலத்தில், வௌிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களினால் நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply