பேதைப்பொருட்களை வயிற்றினுள் மறைத்து கத்தாருக்குள் கடத்த முயன்றவர் விமான நிலையத்தில் கைது!

பேதைப்பொருட்களை வயிற்றினுள் மறைத்து கத்தாருக்குள் கடத்த முயன்றவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கத்தார் சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. கஞ்சா மற்றும் டிராமாடோல் மாத்திரைகள் போன்ற போதைப்பொருட்களை கத்தாருக்குள் கடந்த முற்பட்ட வேளையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டிக்கரில் மறைத்த
48.3 கிராம் கஞ்சா 7 காப்ஸ்யூல்களையும், மற்றும் ஒன்பது மாத்திரைகள் டிராமாடோல் போதை மாத்திரைகளையும் சமூக வலைதளப் பதிவு ஒன்றின் அடிப்படையில் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது.

பயணியின் வயிற்றில் போதைப் பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக சந்தேகித்த பின்னர் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் முழு உடல் ஸ்கேனர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என்பதாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply