கத்தாரில் மார்ச் 7ம் திகதி வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது!

Bank Holiday
கத்தாரிலுள்ள அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கும்  மார்ச் 7ம் திகதி வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை  வங்கிகள், பண பரிவர்த்தனை நிலையங்கள், முதலீடு மற்றும் நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு தரகர் நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

bonvoy
bonvoy

இந்த நடைமுறையானது 2009 ஆம் ஆண்டின் அமைச்சர்கள் கவுன்சில் முடிவு எண் (33) க்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படுவதாக கத்தார் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை கத்தாரில் செயல்படும் அனைத்து வங்கிகளுக்கும் உத்தியோகபூர்வ விடுமுறையாக இருக்கும் என்பதாக அமைச்சரவை முடிவு தெரிவிக்கின்றது. மேற்படி நிறுவனங்கள் அனைத்தும் 2021 மார்ச் 8 திங்கள் அன்று மீண்டும் திறக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply