Qatar News

கடந்த 10 வருடங்களில் 6500 வெளிநாட்டுப் பணியாளர்கள் கத்தாரில் மரணம்! இலங்கையர்கள் 557 பேர் மரணம்!

கத்தாரில் தொழில்புரிந்த நிலையில் 6500ற்கும் அதிகமாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கடந்த 10 வருடங்களிற்குள் உயிரிழந்திருப்பதாக கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பல்வேறு விபத்துக்களில் பலியாகியிருக்கின்றனர்.
2022ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிற்கான அனுசரணை நாடாக கத்தார் 10 வருடங்களாக அதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்டு வருகின்றது.
 
இதற்காக பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்களில் 12 பேர் ஒருவாரத்திற்கு உயிரிழந்துவந்த நிலையில், இதுவரை 6500 பேர்வரை பலியாகியிருப்பதாக கார்டியர் பத்திரிகை தெரிவித்துள்ளது.
 
இவர்களில் கடந்த 10 வருடங்களில்
இந்தியர்கள்  2711 பேரும்
நோபாளிகள் 1641 பேரும்
பங்காளிகள் 1018 பேரும்
பாகிஸ்தானிகள் 824 பேரும்
இலங்கையர்கள் 557 பேரும்
கத்தாரில் உயிரிழந்துள்ளனர். மேலும் பிலிப்பைன்ஸ், கென்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளளும் உயிரிழந்திருப்பதாக கார்டியர் பத்திரிகை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

Related Articles

Leave a Reply

Back to top button
%d