கத்தார் தனியார் பாடசாலைகளை கட்டணங்களை 2 சதவீதத்தால் அதிகரிக்க அனுமதி!

கத்தார் தனியார் பாடசாலைகள் கட்டணங்களை 2 சதவீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார்ப் பாடசாலைகள் 8 சதவீதம் வரையான கட்டண அதிகரிப்புக்கு கோரிக்கை விடுத்த போதும், 1-2 சதவீதமான கட்டண அதிகரிப்புக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கத்தார் கல்வியமைச்சின் தனியார் பாடசாலை விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் Omar Al-Naama அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

பாடசாலைக் கட்டடங்களை நவீனப் படுத்தல், பாடசாலை வளாகங்களை புதிய இடத்திற்கு மாற்றுதல் அல்லது அதிக வாடகை போன்ற நியாயமான காரணங்களை கருத்திற் கொண்டு கட்டணங்களை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக Omar Al-Naama அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply