2024ம் ஆண்டின் சிறந்த விமான நிலையமாக கத்தார் விமான நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் Skytrax நிறுவனத்தினால் கத்தார் விமான நிலையம் 2024ம் ஆண்டுக்கான உலகளவில் முதன்மை விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது தொடர்பாக கத்தார் விமான நிலைய தலைமை அதிகாரி Engr. Badr Mohammed Al-Meer, அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, Skytrax நிறுவனத்தினால் 2024ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையமாக கத்தார் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. விமான நிலையத்திற்கு கிடைத்த சாதனையாக இதனைப் பார்க்கின்றோம். மேலும் எதிர்காலத்திலும் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை எமது விமான நிலையம் வழங்கும் என்றார்.
மேலும், சிறப்பான விமானப் பயணங்களை மேற்கொள்ள எமது விமான நிலையம் உலகின் ஏனைய விமான நிலையங்களுடன் இணைந்து செயற்படும். அத்துடன் இந்த நேரத்தில் எமது பங்குதாரர்களுக்கும், ஊழியர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The World’s Top 20 Airports of 2024
- Doha Hamad Airport
- Singapore Changi Airport
- Seoul Incheon Airport
- Tokyo Haneda Airport
- Tokyo Narita Airport
- Paris Charles de Gaulle Airport
- Dubai Airport
- Munich Airport
- Zurich Airport
- Istanbul Airport
- Hong Kong Airport
- Rome Fiumicino Airport
- Vienna Airport
- Helsinki-Vantaa
- Madrid-Barajas
- Centrair Nagoya Airport
- Vancouver Airport
- Kansai Airport
- Melbourne Airport
- Copenhagen Airport
ALSO READ : கத்தார் சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!