கத்தாரில் மார்ச் 11ம் திகதி முதல் நோன்பு தினமாக இருக்கும் – Qatar Calendar House

எதிர்வரும் மார்ச் 11ம் திகதி கத்தாரில் 2024ம் ஆண்டுக்கான முதல் நோன்பு தினமாக இருக்கும் என்பதாக Qatar Calendar House தெரிவித்துள்ளது.

வானவியல் கணக்கீட்டின் படி 11ம் திகதி ரமழான் மாத முதல் தினமாக இருக்கும் எனவும்,1445ம் ஹிஜ்ரி ஆண்டின் ஷஃபான் மாத இறுதி தினமாக 10ம் திகதி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரைப் பொறுத்த வரையில். இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சாகிய அவ்காப் (Awqaf)யின் கீழ் இயங்கும்  பிறை பார்க்கும் குழு(Crescent Sighting Committee) பிறை தொடர்பான அறிவித்தல்களை வெளியிட அதிகாரமளிக்கப்பட்ட  அமைப்பாகும்.

1445ம் ஆண்டுக்குரிய ரமழான அனைவரும் சிறப்பானதாக அமைய ஏக இறைவனிடம் பிரார்த்திப்போம்.

Also Read: சவூதியில் பன்மடங்கு உயர்கிறது பணியாளர்களின் சம்பளம் – 2024 அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *