வெளிநாடுகளில் பணிபுரிந்து தாயகம் திரும்பும் இலங்கையர்களுக்கு மே 1ம் திகதி முதல் மகிழ்ச்சியான செய்தியொன்றை தொழில் மற்றும் வெளியாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை தொழில் மற்றும் வெளியாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நானயக்கார தெரிவிக்கும் போது வெளிநாடுகளில் பணிந்து புரிந்து தாயகம் திரும்பு பணியார்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்பம் தீர்வை வரிச் சலுகை (Duty Free) அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சலுகை அதிகரிப்பு செயற்பாடுகள் மே மாதம் 1ம் திகதி முதல் (இன்று) நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையைப் பெற்றுக்கொள்ள வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் இலங்கைக்கு பணம் அனுப்பும் போது இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட முறையில் மாத்திரம் அனுப்பியிருத்தல் கட்டாயம் என்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 2400 முதல் 4799 டொலர் வரை நிதியை அனுப்பும் வௌிநாட்டு பணியாளர்களுக்கு 600 டொலர் மேலதிக தீர்வை வரி சலுகை (Duty Free) பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
4800 முதல் 7199 டொலர் வரை நிதியை அனுப்பி வைப்போருக்கு 960 டொலர் மேலதிக தீர்வை வரி சலுகை பெற்றுக் கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: கத்தாரில் 2023ம் ஆண்டு மே மாதத்திற்கான எரிபொருள் விலை விபரங்கள்!