கத்தார் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 16) அல் வஸ்மி சீசன் ஆரம்பிக்கின்றது என்பதாக கத்தார் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அல் வஸ்மி பருவம் என்பது மழைக்காலத்திற்கான உள்ளூர் சொல்லாகும். இதன் போது நாடு 52 நாட்களுக்கு காற்று, புயல் மற்றும் மழை போன்றவை கத்தாரில் பொழியும். “ஜெரனியம் (Geranium) போன்ற சில உள்ளூர் தாவரங்கள் வளர மழைப்பொழிவுடன் ஒத்துப்போவதால் இந்தப் பருவம் அவ்வாறு பெயரிடப்பட்டது” என்று QMD ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேற்படி அல் வஸ்மி பருவத்தில், மேகங்கள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்கின்றன, மேலும் நல்ல மழை பொழிவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் கத்தார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவநிலையில் அதிகபட்ச வெப்பநிலை தோஹாவில் படிப்படியாக குறைந்து 35 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருக்கும் என்று காலநிலை பதிவுகள் குறிப்பிடுகின்றன. மறுபுறம், குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 20 டிகிரி செல்சியஸ் வரை குறையும், பகல் நேரத்தில் ஒட்டுமொத்த மிதமான வெப்பநிலை மற்றும் இரவில் ஒப்பீட்டளவில் குளிர்ந்த வெப்பநிலை, வடமேற்கு காற்றுடன் சேர்ந்து இருக்கும் என்பதாக கத்தார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: 2022 கத்தார் தான் தனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் – லியோனல் மெஸ்ஸி