கத்தார் – சவுதிக்கிடையிலான இரயில் பாதை அமைக்கும் திட்டம் – இரு நாட்டு தலைவர்களும் ஆராய்வு!

சகோதர நாடுகளான கத்தார் – சவுதிக்கிடையிலான இரயில் பாதை அமைப்பு குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆராய்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கத்தாரின் போக்குவரத்துத் துறை அமைச்சர் H E Jassim Saif   Ahmed   Al   Sulaiti   அவர்களும், சவுதி அரேபியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் H  E  Eng.  Saleh  bin  Nasser  Al  Jasser  அவர்களும் மேற்படி திட்டம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

மேற்படி கலந்துரையாடலில் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் இரயில்வே மற்றும் அவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் போன்றவை கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கிடையில் இரயில் பாதைகளைப அமைப்பதற்கான திட்டங்கள் பற்றிய கள ஆய்வை மேற்கொள்வதற்கான திகதிகள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளன.

மேற்படி கூட்டத்தில் கத்தாரின் போக்குவரத்துத் அமைச்சின் அதிகாரிகளும், கத்தார்  போக்குவரத்து துறை பிரதிநிதிகள், சவுதி அரேபியாவின்  போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் Dr.   Rumaih   Mohammed  Al  Rumaih அவர்களும், சவுதிய போக்குவரத்து அமைச்சின் தூதுக் குழுவினரும் கலந்து கொண்டனர்.

மேற்படி கலந்துரையாடலின் பின்னர் இரு நாட்டு தலைவர்களும், டோஹா மெட்ரோ செயற்றிட்டதை நேரடியாக சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நடுவானில் பறந்து கொண்டிருந்த கத்தார் எர்வெய்ஸ் விமானத்தில் பிறந்த குழந்தை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *