கத்தாரில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 3 வார சிசு பரிதாப மரணம்!

3 week old baby dies of COVID 19 in Qatar

கத்தாரில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 3 வார சிசு பரிதாபமாக  மரணமான சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. கத்தாரின் நாளாந்த கொரோனா நிலவரங்களை அறிவிக்கும் போதே கத்தார் பொது சுகாதார அமைச்சு இந்த துயர செய்தியை வெளியிட்டுள்ளது.

மேற்படி உயிரிழந்த 3 வார சிசுவிற்கு கொரோனா தவிர்ந்த எந்த விதமான நோய் இல்லையென்பதாக வைத்தியா்கள் உறுதிப்படுத்தியுள்ளர். பொதுவாக குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுவதனால், கொரோனாவின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. என்றாலும், இந்த சிசுவின் இறப்பானது கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கத்தார் பொது சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்களின் அடிப்படையில், இன்றைய தினம் (16.01.2022) புதிதாக 4021 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இரு மரண சம்பவங்களும் பதிவாகியுள்ளன. மேற்படி இருவரில் ஒருவர் இந்த 3 வார சிசு என்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கத்தாரிலுள்ள பொது மக்கள் கத்தார் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுமாறும், உரியவர்கள் கொரோனாவுக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும், கொரோனா தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தார் – சவுதிக்கிடையிலான இரயில் பாதை அமைக்கும் திட்டம் – இரு நாட்டு தலைவர்களும் ஆராய்வு!

Leave a Reply