கத்தாரில் வேகக்கட்டுப்பாட்டை கண்காணிக்க மேலும் மொபைல் கேமராக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கத்தார் போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அதிவேகமானது விபத்துக்களுக்கான காரணமாகும். இதனால் மரணங்களும், பாரதூரமான காயங்களும் ஏற்படுகின்றன. எனவே அதிவேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். எனவே கத்தாரில் வேகக்கட்டுப்பாட்டை கண்காணிக்க மேலும் மொபைல் கேமராக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் சிவில் மற்றும் போலீஸ் ரோந்துகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, ரோந்து மொபைல் ரேடாரைப் பயன்படுத்தி அதிவேகமாக இயக்கப்படும் வாகனத்தை கண்காணிக்கும் பணிகளும் மும்முரமான நடைபெறுகின்றது. எனவே வாகன ஓட்டுநர்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் என்பதாக கத்தார் பாதுகாப்பு திணைக்களத்தின் ரேடார் பகுதிப் பொறுப்பாளர் Lieutenant Rashid Khamis Al Kubaisi அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கத்தார் வாழ் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் போக்குவரத்து, வீதி விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கத்தாரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! டிசம்பர் 31 முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!