கத்தாரில் மூன்று நாட்களுக்கு மூடுபனிக் காலைநிலை நிலவும் என்பதாக கத்தார் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாளை வியாக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் இரவு, மற்றும் அதிகாலை நேரங்களில் மூடுபனிக்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் படியும் QMD தெரிவித்துள்ளது. பொதுவாக வாகன ஓட்டுநர்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் கத்தாரின் பல நகரங்களில் மழை பெயlவதற்கான சாத்தியக் கூறுகளும் தென்படுவதாக கத்தார் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read : வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ள கத்தாரின் வெப்பநிலை, குளிர் காலம் ஆரம்பம் – QMD தகவல்