கத்தாரில் வாகனம் செலுத்தும் போது கைப்பேசி பாவிப்பதை கண்காணிக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கத்தார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
கத்தார் முழுதும் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராக்களில் (CCTV cameras), வாகனம் செலுத்தும் போது கைப்பேசி பாவிப்பதை கண்காணிக்கும் வசதி நிறுவப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக சமிஞ்சைகளில் (traffic signals) இந்த கண்காணிப்பு நடைமுறை தீவிரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் தனது காரில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்லும் போது கைப்பேசி பாவனையால் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து தொடர்பான விளிப்புணர்வு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக கத்தார் போக்குவரத்துப் துறைப் பொறுப்பாளர் Dr. Muhammad Radi Al Hajri தெரிவித்துள்ளார்.
அவர் கத்தார் வானொலி நிகழ்ச்சி ஒன்று வழங்கிய விசேட செவ்விலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கைப்பேசிப் பாவனை தற்போதைய நாட்களில் மிகவும் பிரச்சினைக்குறிய விடயமாக மாறிவுள்ளதாகவும், வீடுகளில் கூட பலர் கைப்பேசிப் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கத்தார் பயணிக்கும் அனைவருக்கும் சுகாதார காப்பீடு கட்டாயம் – வருகிறது புதிய சட்டம்!