கத்தாரில் PCR பரிசோதனைக் கட்டணம் 160 ரியால்களாக குறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையானது எதிர்வரும் அக்டோபர் 6ம் திகதி முதல் பின்பற்றப்படவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் PCR பரிசோதனைக் கட்டணம் 300 ரியால்களாக நிர்ணயிக்கப்பட்டது.
என்றாலும் பல தனியார் நிறுவனங்கள் வர்த்த நோக்கில் 180 ரியால்களை வரை PCR கட்டணங்களைக் குறைத்துள்ள நிலையில் கத்தார் பொது சுகாதார அமைச்சு PCR பரிசோதனைக் கட்டணங்களை 160 ரியால்களாகவும், அன்டீஜன் பரிசோதனைக் கட்டணங்களை 50 ரியால்களாகவும் நிர்ணயம் செய்துள்ளது.
அக்டோபர் 6ம் திகதி முதல் மேற்படி நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக அறிவிட முடியாது என்பதாகவும் சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.