கத்தாரில் மசூதிகளில் OCT 03ம் திகதி முதல் சமூக இடைவெளிகள் கிடையாது

கத்தாரில் மசூதிகளில் OCT 03ம் திகதி முதல் சமூக இடைவெளிகள் கிடையாது என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு (Awqaf ) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கத்தாரில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கி சாதாரண இயல்பு வாழ்க்கையை மீண்டும் கொண்டுவரும் திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஆக்டோபர் 3ம் திகதி முதல் பின்வரும் விடயங்கள் பின்பற்றப்படவுள்ளதாக அவ்காப் தெரிவித்துள்ளது.

  • ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆத் தொழுகைகளில் சமூக இடைவெளிகள் பின்பற்றத் தேவையில்லை
  • ஜும்ஆப் பிரசங்கத்தின் (ஜும்ஆ பயான்) போது மாத்திரம் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடித்தல்
  • மசூதிகளில் அமைந்துள்ள மலசலகூடங்கள், வுழு செய்வதற்கான இடங்களைத் திறத்தல் (சனத்தொகை குறைந்த இடங்களில்)

அத்துடன் தொழுகைக்கு மசூதிக்கு வருபவர்கள் தங்களுக்கான தொழுகை விரிப்புக்களை கொண்டு வருவதுடன், முகக் கவசங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்பதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் தனது 15வது கிளையை MUITHER நகரில் திறந்தது LULU குழுமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *