பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய கத்தார் உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலமானது செனயா வீதி இலக்கம் 1ல் அமைந்துள்ள பட்டறைகள் மற்றும் போக்குவரத்து துறை வளாகத்திற்கு அருகில்
செப்டம்பர் மாதம் 12ம் திகதி முதல் 30 திகதி வரை மாலை 4 மணிக்கும் இரவு 8 மணிக்கும் இடையில் நடைபெறுகிறது.
சட்ட ரீதியான பிரச்சினைகள், மற்றும் நிதி ரீதியான பிரச்சினைகள் எதுவும் அற்ற வாகனங்களே ஏலத்தில் விற்கப்படுவதாக உள்துறை அமைச்சு தெளிவு படுத்தியுள்ளது.
அத்துடன், ஏலத்தில் வாகனங்களை வாங்க விரும்புவர்கள் காலை நேரத்தில் அதற்கான அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். என்பதோடு, கார், இயந்திரங்களுக்கான ஏலம் செப்டம்பர் 12ம் திகதி முதலும்,பட்டறை உபகரணங்கள் மற்றும் பழுதடைந்த மின்கலங்கள் போன்றவற்றுக்கான ஏலம் மூலம் செப்டம்பர் 15ம் திகதி முதலும் ஆரம்பிக்கப்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.