கத்தாரிலுள்ள வியாபார நிறுவனங்கள் இதைச் செய்யத் தவறினால் 3000 றியால்கள் அபராதம்!

கத்தார் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு Ministry of Commerce and Industry (MoCI) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது கத்தாரிலுள்ள விற்பனை நிறுவனங்களில் அனைத்தும் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைப்பட்டியலை கட்டாயமாக அறபு மொழியில் காட்சிப்படுத்த வேண்டும் என்பதாக தெரிவித்துள்ளது.

2008 ஆண்டு 8ம் இலக்க அத்தியாயம் 7.8.11.17யின் சட்டத்தின் படி அனைத்து வகையான பொருட்கள் மற்றும் சேவை வழங்குனர்கள் வியாபாரம் சார் சட்ட விதிகளைப் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இந்த விதிகளை மீறுபவர்கள் இரண்டு வருடங்களுக்கு குறைவில்லாத காலம் சிறைப்படுத்தப்படவும், அல்லது 3000 ஆயிரம் கத்தார் றியால்களுக்கு குறைவில்லாத அத்துடன் ஒரு மில்லியன் கத்தார் றியால்களுக்கு அதிகமாகாத தொகை அபராதம் விதிக்கப்படவும் முடியும் என்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே வியாபார நிறுவனங்களை நடத்துபர்கள் விலைப்பட்டியல் தொடா்பான அமைச்சின் விதிகளைப் பின்பற்றி விலைப்பட்டியலை அரபு மொழியிலும், தாங்கள் விரும்பும் ஏனைய மொழிகளிலும் காட்சிப்படுத்தி வைக்கும்படி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விற்க கத்தார் உள்துறை அமைச்சு நடவடிக்கை!

Qatar ministry reminder display price list in Arabic

Leave a Reply