இலங்கை உட்பட 6 ஆசிய நாடுகளிலிருந்து கத்தார் பயணிப்பவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் – ஆகஸ்ட் 2 முதல் புதிய நடைமுறை!

இலங்கை உட்பட 6 ஆசிய நாடுகளிலிருந்து கத்தார் பயணிப்பவர்களுக்கு கட்டாயமாக இரண்டு நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதாக கத்தார் சுகாதா அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறையானது நாளை முதல் (ஆகஸ்ட் 02) பின்பற்றப்படவுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், தடுப்பூசி பெற்றிருந்தாலும், அல்லது கொரோனாவிலிருந்து குணடைந்திருந்தாலும் இரண்டு நாட்கள் கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதோடு, இரண்டாவது நாளில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையின் அடிப்படையில், விடுவிக்கப்படுவார்கள் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் கத்தார் நாடுகளை சிவப்பு பட்டியல் நாடுகள், மஞ்சல் பட்டியல் நாடுக்ள மற்றும் பச்சைப் பட்டியல் நாடுகள் என்ற அடிப்படையில் வேறுபடுத்தி ஒவ்வொரு நாடுகளுக்கு வெற்வேறான பயணக் கட்டுப்பாடுகளை அண்மையில் விதித்திருந்தது. என்றாலும் தற்போது சிவப்பு பட்டியல் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

புதிய அறிவித்தலின் படி, பச்சை நிறப்பட்டியல் நாடுகள் 21 ஆகவும், மஞ்சல் நிறப்பட்டியல் நாடுகள் 34 ஆகவும், சிவப்பு நிறப் பட்டியல் நாடுகள் 152 ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளது. சிவப்பு பட்டியலில் புதிதாக 58 நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Also Read : கத்தார் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள பச்சை, மஞ்சல், சிவப்பு பட்டியல் நாடுகள் என்றால் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *