இப்போது கத்தார் பயணிக்க முன் நீங்கள் செய்ய வேண்டியது – டிஜிட்டல் வழிகாட்டல்

கோவிட் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, கத்தார் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கத்தார் அரசின் தகவல் தொடர்புத் துறை புதிய டிஜிட்டல் வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கத்தாருக்கு பயணம் செல்பவர்களுக்கு ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டி www.gco.gov.qa/en/travel என்ற இணைய தளத்திற்குச் சென்று அங்கு கேட்கப் பட்டுள்ள ஆறு கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதுமானது.

ஆறு வினாக்களும் இவைகள் தான்

  1. Qatar ID Holder or No
  2. கோவிட் நிலை?
  3. 11 வயதுக்கு குறைந்த பிள்ளைகள் உடன் பயணிக்கின்றார்களா?
  4. 12-17 இடைப்பட்ட குழந்தைகள் உங்களுடன் பயணிக்கின்றார்களா?
  5. எந்த நாட்டிலிருந்து பயணிக்கின்றீர்கள்?
  6. கடந்த 10 நாட்களில் பயணித்த நாடு தொடர்பான விபரம்

இப்பக்கத்தில் ஒரு பயணி தரும் தகவல்களின் அடிப்படையில், அவரது பயணம் தொடர்பான விதிமுறைகள், தனிமைப் படுத்தல்கள், இன்ன பிற தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க : கொரோனா தடுப்பூசி பெற்று இலங்கையிலிருந்து கத்தாருக்கு பயணிக்க இருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *