கத்தாரில் கடந்த 24 மணித்தியாலத்தில் (10.02.2021) புதிதாக 97 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஒருவர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1513 ஆக சரிவடைந்துள்ளது.
வகை | இன்றைய நிலவரம் (10-07.2021) | மொத்த எண்ணிக்கை |
புதிய தொற்றாளர்கள் | 97 | 223272 |
குணமடைந்தவர்கள் | 133 | 221160 |
மரணங்கள் | 01 | 599 |
வழங்கப்பட்ட புதிய தடுப்பூசிகள் | 6519 | 3390306 |
புதிய PCR எண்ணிக்கை | 16635 | 2217350 |
கொரோனா வைரஸ் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்ய 16000 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்,
- வெளியில் செல்லும் போது முகக் கவசத்தை அணிந்து கொள்ளுமாறும்,
- சமூக இடைவெளியகளைப் பேணிக்கொள்ளுமாறும்,
- கொரோனாவிலிருந்து தங்களை காத்துக் கொள்ள கத்தார் சுகாதார அமைச்சினால் வலியுறுத்தப்பட்டுள்ள அனைத்துமுன்னெச்சரிக்கைகளையும் தவறாது பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.