கத்தாரில் மார்ச் 21 முதல், 30 சதவீத மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு (Education Ministry)தெரிவித்துள்ளது. தற்போது 50 சதவீதமான மாணவர்களே பாடசாலை வளாகத்தினுள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் வரவு வீதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் எதிர்வரும் மார்ச் 21ம் திகதி முதல் 30 சதவீதமான மாணவர்களை மாத்திரமே பாடசாலைக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், ஏனைய மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை ஆன்லைன் (blended education) முறையிலும் அமைத்துக் கொள்ளும் படி கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடசாலை சுற்றுச் சூழலின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் கருதி இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.