கத்தாரில் 152 அறைகளுடன் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மிதக்கும் ஹோட்டல்!

floating hotel in Qatar
கத்தாரில் மிதக்கும் ஹோட்டல் ஒன்று நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெதுவாக சுழன்று தனக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மற்றும் காற்றிலிருந்து உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் இது அமையவுள்ளதாக துருக்கிய கட்டிடக் கலை நிறுவனமான Hayri Atak தெரிவித்துள்ளது.

மேலும், விருந்தினர்கள் கார், படகு அல்லது ஹெலிகாப்டர் சவாரி மூலம் மிதக்கும் கப்பலில் அமைந்துள்ள ஹெலிபேட் (helipad) ஹோட்டலை அணுகுவதற்கான வசதிகள் காணப்படும். இந்த ஹோட்டலில் 700 சதுர மீட்டர் பரப்பளவிலான லாபி அமைக்கப்படவுள்ளது.
Hayri Atak Floating Hotel
Image: Thanks to https://robbreport.com/
மேலும் 152 அறைகள் காணப்படும் ஒவ்வொன்றும் அதன் சொந்த பால்கனியைக் கொண்டிருக்கும். கட்டிடம் சுழலும் போது விருந்தினர்களுக்கு வெவ்வேறு காட்டிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள், ஸ்பா, ஜிம் மற்றும் மினி கோல்ஃப் மைதானம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
இதன் நிர்மாணப் பணிகளானது கடந்த 2020ம் ஆண்டு ஆரம்பக்கப்பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் 2025ம் ஆண்டளவில் நிறைவடையும் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply