கத்தாரில் இதுவரை 594613 கொரோனா தடுப்பூசிகள் இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கொவிட் 19 தடுப்பூசி எனும் திட்டத்தின் அடிப்படையில் கத்தாரில் கொரோனா தடுப்பூசிகள் (Covid-19 Vaccines) இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை 5 இலட்சத்து 94 ஆயிரத்து 613 தடுப்பூசிகள் இடப்பட்டுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது 16 வயதுக்கு மேட்பட்ட கத்தார் சனத்தொகையின் 18.2%ஆகும். மேலும் கடந்த 7 நாட்களில் 1 இலட்சத்து 34 ஆயிரத்து 498 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசிகளைப் (Covid-19 Vaccines) பெற்றுக்கொண்டவர்களில் 80 வயதை விட அதிகமானவர்கள் 70 சதவீதமாகவும். 70 வயதை விட அதிகமானவர்கள் 69.4 சதவீதமாகவும், 60 வயதை விட அதிகமானவர்கள் 66.8 சதவீதமாகவும் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும் 16 வயதை விட குறைவானவர்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான அனுமதிவழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : கத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா? அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்?