இலங்கை, இந்தியாவிலிருந்து கத்தாருக்கு பயணிக்க PCR பரிசோதனை அவசியமில்லை – கத்தார் ஏர்வேர்ஸ் அறிவிப்பு

கத்தாருக்கு பயணிக்க விரும்புவர்கள் தாம் பயணிக்க 72 மணித்தியாலத்தினும் PCR பரிசோதனை செய்து மறை அறிக்கை PCR Negative Report அவசியம் என்ற நடைமுறை தற்போது அமூலில் உள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் திகதி முதல்  13 நாடுகளிலிருந்து கத்தாருக்கு பயணிக்க இருப்பவர்கள் negative test reportயை சமர்ப்பிக்க தேவையில்லை என்பதாக கத்தார்
ஏர்வெய்ஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கத்தார் ஏர்வெய்ஸ் தெரிவித்துள்ளதாவது, எமது வாடிக்கையாளர்கள் எங்கு பயணிக்க விரும்புகிறார்களோ அங்கு அவர்களை பாதுகாப்பாக  கொண்டு போய்ச்சேர்ப்பது எம கடமையாகும். அதன்படி எமது விதிகள் மற்றும்ஒழுங்குமுறைகளை இற்றைப்படுத்தியுள்ளோம். அதன் படி எதிர்வரும்
16ம் திகதி முதல், 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள் PCR மறை அறிக்கை (PCR Negative Report)யை சமர்ப்பிக்க தேவையில்லை என்பதாக உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு விதிவிலக்களிக்கப்பட்டுள்ள 13 நாடுகளும் வருமாறு,
ஆர்மேனியா.
பங்களாதேஷ்
பிரேசில்
இந்தியா
ஈரான்
ஈராக்
நேபால்
நைஜீரியா
பாகிஸ்தான்
பிலிப்பைன்ஸ்
ரஷ்யா
ங்கை
தன்சானியா

இதையும் படியுங்கள் : கத்தாரில் இதுவரை 6 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் (Covid-19 Vaccines) இடப்பட்டுள்ளன.

Leave a Reply