கத்தாரில் எதிர்வரும் 2024ம் ஆண்டு ஹஜ் பெருநாள் விடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்பை அரசாங்கம் விடுத்துள்ளது. ஜுன் 16ம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் போன்றவற்றுக்கான விடுமுறைகள் எதிர்வரும் ஜுன் 16ம் திகதி முதல் ஆரம்பமாகி ஜுன் மாதம் 20ம் திகதி வரை நீடிக்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
அரச ஊழியர்கள் ஜுன் 23ம் திகதி முதல் பணிக்கு திரும்புவர்கள். அத்துடன் கத்தார் மத்திய வங்கியின் கீழ் இயங்கும், வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்கள் போன்றவற்றுக்கான விடுமுறைகளை மத்திய வங்கியாலேயே தீர்மானிக்கப்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களைப் பொறுத்தரை பெருநாள் தினம், அத்துடன் மேலும் இரு தினங்கள் என்ற அடிப்படையில் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் ஹஜ்ஜுப் பெருநாள் ஜுன் 16ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை கொண்டாப்படுவதனால், ஞாயிறு(ஜுன்-16, திங்கள்(ஜுன்-17), மற்றும் செவ்வாய் (ஜுன்-18) ஆகிய தினங்களில் தனியாருக்கு விடுறையாக இருக்கும்.
அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்
இதையும் படிங்க: கத்தாரிலிருந்து பெருநாளைக்கு தாயகம் திரும்ப இருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!