பறக்கும் இலத்திரனியல் டாக்சிகளை அறிமுகம் செய்கிறது கத்தார்!

பறக்கும் இலத்திரனியல் டாக்சிகளை கத்தார் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2025ம் ஆண்டு ஆரம்பத்தில் மின்சாரம் மூலம் இயங்கும் டாக்சிகள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் டெலிவரி விமானங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக கத்தார் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்படி டாக்சி மற்றும் டெலிவரி விமானங்களின் சோதனை ஓட்டங்களுக்கான உரிய அனுமதிகளைப் பெறுவதற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதிகள் கிடைக்கப்பெறும் போது சோதனை ஓட்டங்கள் நடைபெற்று, 2025ம் ஆண்டு ஆரம்பித்தில்  மின்சார டாக்சி மற்றும் டெலிவரி விமானங்களின் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்பதாக போக்குவரத் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய உலகளாவிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றைப் பயன்படுத்தும் விமான இயக்கம் என்ற புதிய கருத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் கத்தாரின் போக்குவரத்துத் துறையின் செயல்திறனை அதிகரிக்க இந்த திட்டம் உதவும் என்பதாக போக்குவரத்து அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Also Read: கத்தாரில் இலத்திரனியல் பஸ் மயமாகும் பொதுப் போக்குவரத்து!

Leave a Reply