கத்தாரில் நாளை முதல் (மே-08) பலமான தூசிக்காற்று வீசும் – கத்தார் வானிலை ஆய்வு மையம் தகவல்

Qatar Meteorology forecasts strong wind

Qatar Meteorology forecasts strong wind கத்தாரில் நாளை முதல் (மே-08) பலமான தூசிக்காற்று வீசும்  சாத்தியம் காணப்படுவதாக கத்தார் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கத்தார் வானிலை ஆய்வுத் துறையின் (QMD) இன்றைய வானிலை புதுப்பிப்பின்படி, வடக்குத் திசையிலிருந்து வீசக்கூடிய காற்று  நாளை மே 8 முதல் கத்தார் நாட்டை வந்தடையும் எனவும், அது வார இறுதி வரை தொடரும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தக் காற்றானது பலமாக வீசும் சாத்தியம் காணப்படுவதனால் தூசிக்காற்று நிலைமை ஏற்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் நாளை, மே 8 ஆம் தேதிக்கான வெப்பநிலை 29°C முதல் 36°C வரை இருக்கும் என்று QMD கணித்துள்ளது. மேலும் காற்று வேகமாக வீசக் கூடிய கடற்கரையில் அலையின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதோடு, அலைகளின் உயரம் 4-8 அடி வரையும், சில நேரங்களில் 12 அடி வரையும் உயரக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக கத்தார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: கத்தாரில் இந்த குற்றச் செயல்களை செய்து சிக்கினால் 5 இலட்சம் ரியால்கள் அபராதம், 20 வருடங்கள் சிறை

Leave a Reply