கத்தாரில் பணிக்கு சமூகமளிக்காமல், ஊதியம் பெற்ற அரச ஊழியர்கள் 09 பேர் கைது!

Nine government employees face criminal prosecution over attendance

கத்தாரில் பணிக்கு சமூகமளிக்காமல், ஊதியம் பெற்ற அரச ஊழியர்கள் 09 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கணக்காய்வு அதிகாரிகளின் சோதனையின் போது சிக்கிய மேற்படி 09 அரச ஊழியர்களும் தங்களது பணியிடங்களுக்கு சமூமகளிக்காமல் இருந்துள்ளதோடு, பின்னர் சமூகமளித்ததைப் போன்று வரவுப் பதிவை மாற்றியுள்ளதோடு, அந்த பணி நேரங்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுள்ளனர். மேற்படி இந்த செயற்பாடானது இராஜ துரோகமாகும்.

பணிக்கு சமூகமளிக்காதவர்கள் அலுவலகங்களில் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை, பணிக்கு வந்த ஏனையவர்களிடம் ஒப்படைத்து வரவுப் பதிவை மோசடியாக புதிவு செய்த சம்பவமும் இங்கு அரங்கேற்றப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பு தனது அறிக்கையில், பிரதிவாதிகள் பொது நிதியைப் பயன்படுத்துதல் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களைப் போலி செய்தல் மற்றும் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர், ஏனெனில் இந்தச் செயல்கள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் குற்றங்களாகும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: உலகின் பணக்கார நாடுகள் பட்டியல் 2024, கத்தாருக்கு 5ம் இடம்?

Leave a Reply