கத்தாரில் போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு 50% தள்ளுபடி அறிவிப்பு!

Ministry announces 50% discount on traffic violation fines

போக்குவரத்து அபராதம் செலுத்துதல் மற்றும் வாகனம் வெளியேறுவதற்கான அனுமதிகள் குறித்த புதிய விதிகள் குறித்த உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, போக்குவரத்து விதிமீறல் அபராதங்களில் 50% தள்ளுபடி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் குடிமக்கள், குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் GCC குடிமக்கள் போன்ற அனைவரும், இந்த போக்குவரத்து மீறல் அபராதங்களில் 50% தள்ளுபடிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தள்ளுபடியானது ஜூன் 1, 2024 முதல் ஆகஸ்ட் 31, 2024 வரை பொருந்தும், மேலும் மூன்று ஆண்டுகளுக்குஅதிகாரிக்காமல் பதிவுசெய்யப்பட்ட மீறல்களை உள்ளடக்கிதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த புதிய விதிகள் மற்றும் நடைமுறைகளை அமைச்சகம் இன்று(2024.05.22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டது. போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை முன்கூட்டியே செலுத்துவதை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த தள்ளுபடி செயல்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: உலகின் சிறந்த 100 கடற்கரைகள், கத்தாரின் கடற்கரைக்கு 89வது இடம்

Ministry announces 50% discount on traffic violation fines

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *