கத்தாரின் முக்கிய இடங்களை இனி விமானத்தில் சுற்றிப்பார்க்கலாம் – புதிய விமான சுற்றுலா அறிமுகம்

Discover Qatar introduces air tours around Doha's most popular Places

டிஸ்கவர் கத்தார் தோஹாவின் மிகவும் பிரபலமான தளங்களைச் விமானப் பயணம் மூலமாக சுற்றிப்பார்க்கலாம் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

Discover Qatar ஆனது கத்தார் ஏர்வெய்ஸுடன் இணைந்து இந்த விமான சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த விமானப் பயணமானப் பயணத்தில் ஒரு தடவைக்கு 8 நபர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள். பயண நேரமாணது 45 நிமிடங்களாக காணப்படும்.

இந்த சுற்றுலா பயணத்திற்காக Cessna 208 Caravan என அழைக்கப்படும் விமானம் பயன்படுத்தப்படவுள்ளது. விமானத்தின் ஜன்னல்கள் மிகவும் விசாலமானவையாகும்.விமானத்தில் அமர்ந்து கொண்டே பயணிகள் வெளி அழகை இரசிக்க முடியும்.

இந்த விமானப் பயணமானது தோஹா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கும். அதன் பின்னர் பின்வரும் இடங்களுக்கு செல்லும்.

 • Al Thumama Stadium,
 • Aspire Zone
 • Education City
 • Lusail Stadium,
 • Al Bayt Stadium
 • Thakira Mangrove Forest.
 • The Pearl Island,
 • Al Safliya Island,
 • Katara Cultural Village
 • West Bay.
 • Corniche,
 • National Museum of Qatar,
 • Museum of Islamic Art and
 • Stadium 974
 • Doha International Airport Premium Terminal

இந்த விமான சுற்றுலாவின் முதல் பயணம் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பிக்கின்றது. பறந்த நிலையில் கத்தாரை சுற்றிப் பார்க்க விரும்புவர்கள் இங்கு சென்று டிக்கட்டுக்களை புக்கிங் செய்து கொள்ள முடியும்.

பெரியவர்கள் மற்றும் இரண்டு வயதுக்கு மேற்பட்டி சிறுவர்களுக்கான டிக்கட்டின் விலை 710 ரியால்களாகும். இரண்டு வயதை விட குறைந்தவர்களுக்கு பிரயாணம் இலவசமாகும்.

Also Read: கத்தாரில் போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு 50% தள்ளுபடி அறிவிப்பு!

Leave a Reply