கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் நோன்புப் பெருநாள் விடுமுறை தினங்கள் பற்றிய அறிவித்தல்!

EID Notice Sri Lanka Embassy in qatar

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் நோன்புப் பெருநாள் விடுமுறை தினங்கள் பற்றிய அறிவித்தல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில் தூதரகம் விடுமுறைக்காக மூடப்படும் தினங்கள் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவித்தலின் படி எதிர்வரும் ஏப்ரல் 9ம் திகதி முதல் ஏப்ரல் 14ம் திகதி வரை கத்தாரிலுள்ள இலங்கைகத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஏப்ரல் மாதம் 15ம் திகதி முதல் துதரகத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் அரச அலுவலகங்களுக்கு ஏப்ரல் 7ம் திகதி முதல் 15ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply