மழை காலங்களில் வாகன ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் – கத்தார் உள்துறை அமைச்சு

கத்தாரில் நேற்று தொடக்கம் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்ற நிலையில், வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சின் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

உள்துறை அமைச்சானது தனது உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அவை வருமாறு,

  • வாகன சக்கரங்களின் தரங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
  • வாகன ஓட்டுநர் மற்றும் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட்டை அவசியம் அணிந்து கொள்ளுங்கள்
  • வாகனங்களை வேகத்தை வழமையை விட குறைத்துக் கொள்ளுங்கள்
  • வாகனங்கள் பிரதான விளக்குகளையும், சமிஞ்சை விளக்குகளையும் சரி செய்து, அவற்றின் செயல்திறனை உறுதி செய்து கொள்ளுங்கள்
  • வாகனங்களுக்கிடையில் பாதுகாப்பு தூரங்களை (5 to 10 meters)  பின்பற்றுங்கள்
  • பாதைகளில் வாகனங்களை செலுத்தும் போது உரிய ஒடுதளத்தில் (Lane) மாத்திரம் செலுத்துங்கள்

என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply