கத்தாரில் பணிபுரியும் எவரும், தமது குடும்ப உறுப்பினர்களை கத்தாருக்கு அழைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகளை கத்தார் அமைச்சு வெளியிட்டுள்ளது.
தற்போது, குடும்பக் குடியுரிமை (Family Residency) மற்றும் வருகைக்கான (Visit Visa) விதிமுறைகள் தளர்த்தப் பட்டு உள்ளன.
குடும்பக் குடியுரிமைக்கான புதிய விதிமுறைகள்
அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் QR. 10,000. இவர்களுக்கான தங்குமிடத்தை நிறுவனம் வழங்க வேண்டும்.
தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் QR. 6,000. இவர்களுக்கான தங்குமிடத்தை நிறுவனம் வழங்க வேண்டும். (முன்பு குறைந்தபட்ச சம்பளம் ஆக QR. 15,000 இருந்தது.)
குடியுரிமை விசா விண்ணப்பிக்க, மகன் எனில் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மகள் எனில் அவர் திருமணமாகாதவராக இருக்க வேண்டும்.
மருத்துவக் காப்பீடு அவசியம்.
குழந்தைகளின் வயது 6-18 எனில், கத்தார் நாட்டிலுள்ள உரிமம் பெற்ற பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் அல்லது கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகத்தால் (MoEHE) மேற்பார்வையிடப்படும் கல்வித் தளத்தின் மூலம் நாட்டிற்கு வெளியே அவர்கள் கல்விச் சேர்க்கைக்கான சான்றுகளை வழங்க வேண்டும்.
குடும்ப வருகைக்கான புதிய விதிமுறைகள்
- கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவரே, தனது குடும்பத்திற்கான ஸ்பான்சர் ஆவார்.
- குறைந்தபட்ச மாத சம்பளம் QR. 5,000 ஆக இருக்க வேண்டும்.
- தாய், தந்தை, மனைவி, மக்கள், உடன்பிறந்தோர் போன்ற அனுமதிக்கப்பட்ட உறவினர்களை அழைக்கலாம்.
- எந்த வயதினராகவும் இருக்கலாம். குறிப்பிட்ட வயது வரம்பு ஏதுமில்லை.
- மருத்துவக் காப்பீடு அவசியம்.
- பணி ஒப்பந்தம்
- மேற்கூறப்பட்ட சம்பளம், பணி ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டியது அவசியம்.
கடைநிலை ஊழியர் (லேபர்) தகுதிக்கு இந்த முறை செல்லாது. எனவே, விண்ணப்பிக்கும் முன் கத்தார் ஐடியில் லேபர் எனக் குறிப்பிட்டுள்ளதா என சரி பார்க்கவும்.
விண்ணப்பிப்பது எப்படி?
குடும்பக் குடியுரிமை (Family Residency) மற்றும் வருகைக்கான (Visit Visa) விண்ணப்பங்களை Metrash2 செயலி மூலம் சமர்ப்பிக்கலாம். (நன்றி -IBC Tamil)
Also Read: கத்தாரில் சாரதிகளாக பணிபுரிவோர் கவனத்திற்கு! உள்துறை அமைச்சு விடுக்கும் செய்தி!