Qatar Tamil News

கத்தாரில் இன்று முதல் அதிகரிக்கும் வெப்பநிலை, 43 டிகிரியை வரை உயரும் சாத்தியம்!

கத்தாரின் வெப்பநிலையானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் என்பதாக கத்தார் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மே 12ம் திகதி முதல் 14்ம் திகதி வரை கத்தாரின் வெப்பநிலையானது அதிகரிப்பதோடு, உச்ச வெப்பநிலையானது 43 பாகையை எட்டும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இது கத்தார் வானிலை ஆய்வுத் துறையின் (QMD) சமீபத்திய வானிலை நாளாந்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. . இந்த காலகட்டத்தில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மேலும் எச்சரிக்கைகள் எதுவும் திணைக்களத்தால் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கத்தாரில் தனது 10 வருட சேவையை முடித்துக்கொள்ளும் பிரபல உணவு டெலிவரி நிறுவனம்!

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: