500 கிலோ எடையுடைய உலகின் மிகப்பெரிய கால்பந்து பூட் கத்தாரில் இன்றைய தினம் (14) காட்சிப்படுத்தப்பட்டது. கத்தாரின் கலாச்சார கிராமம் என அறியப்படும் கதாராவில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த கால்ப்பந்து பூட்டானது, 17 அடி நீளமும், 7 அடி உயரமும் கொண்டதாகும். இதன் எடை 500 கிலோவைவிட அதிகமாகும். கால்ப்பந்து பூட்ஸ்கள் தயாரிக்கப்படும், லெதர், ஃபைபர் போன்ற அதே மூலம் பொருட்களைப் பயன்படுத்தி இந்த பூட் தாயரிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
உலகின் மிகப் பெரிய கால்ப்பந்துக்கான கின்னஸ் சாதனையை அடைய முயற்சி செய்வதாகவும், இதனை உருவாக்க 7 மாதங்கள் வரை சென்றதாகவும் அதனது நிருவாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: கத்தார் ஃபீபா டிக்கட்டுக்களை சட்ட விரோதமாக விற்றால் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரியால்களை வரை அபராதம்!