சவுதி அரேபியாவின் கட்டுமாணத்துறையில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் ~ Apply Online

Saudi Arabia Job Vacancies for Sri Lankans by SLBFE

Saudi Arabia Job Vacancies for Sri Lankans by SLBFE

சவுதி அரேபியாவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பாரியளவிலான நிர்மாணத் திட்டத்திற்கான வேலை வாய்ப்புகளுக்கான தகுதி வாய்ந்த இலங்கை நிபுணர்களின் விபரங்களை சேகரிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், (SLBFE) நடவடிக்கை எடுத்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு பணியகம், இத்திட்டத்தின் மூலம் கட்டடக் கலைஞர்கள், பொறியியலாளர்கள் மற்றும் வரைபட கலைஞர்களுக்கு பல வெற்றிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள், தகுதிவாய்ந்த இலங்கை நிபுணர்களுக்கான திட்டத்துடன் இணைக்கப்பட்ட வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காக சவுதி அதிகாரிகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.

வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள்,வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இல் உள்ள ‘K.S.A. இல் கட்டுமானத் துறைக்கான தகுதி வாய்ந்த நிபுணர்களை அடையாளம் காணுதல்’ என்ற இணைய விளம்பரத்துக்கமைய தமது சுயவிபரத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு பணியகத்தின் வேலை வங்கியில் பதிவு செய்து தேவையான விபரங்களை 2022 நவம்பர் 5 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு இலங்கையின் தகுதிவாய்ந்த நிபுணர்களும் கோரப்பட்டுள்ளனர்.

சவுதி திட்டத்துடன் இணைக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை வேலைவாய்ப்பு பணியகத்தின் ஹொட்லைன் 1989 மூலம் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Submit your CV Apply Online

Identification of Qualified Professionals Interested in Construction Sector in Kingdom of Saudi Arabia

Also Visit: சவுதியின் பிரபல உணவகமான அல்பைக் கத்தாரில் தனது கிளைகளை திறக்கிறது! (வீடியோ)

Leave a Reply