Qatar NewsSaudi News

சவுதியின் பிரபல உணவகமான அல்பைக் கத்தாரில் தனது கிளைகளை திறக்கிறது! (வீடியோ)

சவுதியின் பிரபல உணவகமான அல்பைக்(AlBaik) கத்தாரில் தனது கிளைகளை விரைவில் திறக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக AlBaik வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ அறிவிப்பின் படி, கத்தாரில் அல்பைக் உணவகத்தின்  ஐந்து (நடமாடும்)  கிளைகளை விரைவில் திறக்கவுள்ளதாகவும், அவற்றின் இரண்டு நடமாடும் கிளைகளுக்கான வாகனங்கள் இன்று தரைவழியாக கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் கத்தாரில் ஆரம்பிக்கவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளின் போது எமது AlBaik நிறுவனமானது தரமான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்பதாக அதன் நிருவாகம் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் தளம் ஊடாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button
%d