Qatar Tamil NewsWorld News

உலக கால்ப்பந்து போட்டியை நடத்தும் கத்தார் நாட்டிற்கு பாண்டா ஜோடியை பரிசளித்த சீனா!

உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ள கத்தார் நாட்டிற்கு சீனா ஒரு நோடி பாண்டாவை பரிசளித்துள்ளது.

இம்முறை உலக கோப்பை கால்பந்து போட்டி தொடருக்கு சீனா தகுதி பெறவில்லை. இருந்த போதும் கத்தார் நாட்டுடனான தனது நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக சீனா இந்த அன்பளிப்பை அனுப்பி வைத்துள்ளது.

இதன் மூலம் மத்திய – கிழக்கு நாடுகளுக்கு பாண்டாக்கள் வருகை தந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.  மேற்படி பாண்டாக்கள் கத்தார் ஏர்வெய்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானத்தில் நேற்றைய தினம் (19.10.2022) கத்தாரை வந்தடைந்தன.

இந்த பாண்டாக்களுக்காக அல்கோர் நகரில் அமைந்துள்ள பூங்காவில் தனியான இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

china gifted pair of pandas to qatar

கத்தாரை வந்தடைந்த பாண்டாக்கள் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சீனால் ஜிங்ஜிங் (Jing Jing)  என அழைக்கப்பட்ட பாண்டா கத்தாரில் சுஹைல் எனவும், சைஹை( Si Hai) என அழைக்கப்பட்ட பாண்டா தூரயா எனவும் அழைக்கப்படவுள்ள குறிப்பிடத்தக்கது.

Pandas in Qatar
china gifted pair of pandas to qatar

Also Read: உலகின் மிகப் பெரிய இலத்திரனில் பஸ் தரிப்பு நிலையம் கத்தாரில் திறந்து வைப்பு!

Related Articles

Leave a Reply

Back to top button
%d