நடப்பு 2022ம் ஆண்டில் வெளிநாட்டவர்கள் தங்குதவற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் கத்தார் உலகளவில் 26வது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
உலகளவில் வாழும் வெளிநாட்டவர்கள் நலன்கள் தொடர்பாக கண்காணிக்கும் Inter Nation அமைப்பினால் மேற்கொள்ளப்பட் ஆய்வில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன
மேற்படி அமைப்பினால் Expat Insider 2022 survey என்ற தலைப்பில் 177 நாடுகளைச் சேர்ந்த 12,000 தனி நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் முதல் இடத்தை மெக்சிகோ பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை இந்தோனேசியா பெற்றுள்ளது. கத்தார் இராச்சியமானது உலகளவில் 26வது இடத்தைப் பெற்றுள்ளது.
முதல் 10 நாடுகள் வருமாறு.
- Mexico
- Indonesia
- Taiwan
- Portugal
- Spain
- UAE
- Vietnam
- Thailand
- Australia
- Singapore
இந்த ஆய்வானது, வெளிநாட்டவர்களின் வாழ்க்கைத் தரம், எளிதில் குடியேறுவது, வெளிநாட்டில் வேலை செய்வது மற்றும் அவர்கள் வசிக்கும் நாட்டில் தனிப்பட்ட நிதி போன்றவற்றை அடிப்படையாகக் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: கத்தாரில் பணமோசடியில் ஈடுபட்டு வந்த ஏழு வெளிநாட்டவர்கள் கைது!