Qatar Tamil News

கத்தார் பள்ளிவாசல்களில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் – அவ்காஃப்

கத்தார் பள்ளிவாசல்களில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் என்பதாக அவ்காப் அறிவித்துள்ளது.

மூடிய பொது இடங்களுக்குள் மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் கத்தார் அமைச்சரவையின் முடிவிற்குப் பிறகு, ஜூலை 7, 2022 வியாழக்கிழமை (நாளை) முதல் மசூதிகளில் முகமூடி அணிவது கட்டாயம் என்று அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்கிடையில், பொது சுகாதார அமைச்சு (MOPH) இன்றைய அமைச்சரவை அறிவிப்பைத் தொடர்ந்து, மூடிய பொது இடங்களில் ஆறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கு  முகக்கவசம் கட்டாயமாகும் என்று தெரிவித்துள்ளது. இதில் சுகாதார வசதிகள், பணியிடம், பொது போக்குவரத்து, மசூதிகள், உடற்பயிற்சி நிலையங்கள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் திரையரங்குகள், மூடப்பட்ட பிற பொது இடங்கள் ஆகியவை அடங்கும் என்பதா சுகாதார அமைச்சு மேலும் தெளிவித்துள்ளது.

கத்தாரில் தற்போது சராசரி கோவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால் இந்த முடிவு நடைமுறைக்கு வருவதாக கத்தார் சுகாதா அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: கத்தாரின் மூடிய பொது இடங்களில் மாஸ்க் அணிவது ஜுலை-07 முதல் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Back to top button
%d