ஜுலை மாதத்திற்காக பெற்றோல் விலையை குறைத்தது கத்தார் அரசு!

qatar fuel price for July 2022

கத்தாரில் ஜுலை மாதத்துக்கான எரிபொருள் விலை விபரங்கள் கத்தார் எனர்ஜி (QatarEnergy) இன்று வெளியிட்டுள்ளது. உலக சந்தை விலையின் மாற்றத்திற்கு ஏற்ப மாதாந்தம் எரிபொருள் விலைகளில் ஏற்றமற்றும் இறக்கத்தை கத்தார் செய்து வருகின்றது.

அந்த வரிசையில் ஜுலை மாதத்தில், பிரிமியம் பெற்றோல் 1.90 ரியால்களாக விற்கப்பட வரையறை செய்துள்ளது. ஜுன் மாதத்தில் 1.95 ரியால்களாக விற்கப்பட்ட பிரிமியம் பெற்றோலே 5 திர்ஹங்கள் குறைக்கப்பட்டுள்ள 1.90 றியால்களாக இன்று நள்ளிரவு முதல் விற்கப்படவுள்ளன.

என்றாலும் சுபர் பெற்றோல்  டீசல் போன்றவை ஜுன் மாதத்தில் விற்கப்பட்ட அதே விலைகளில் விற்கப்படவுள்ளன. 2.10 ரியால்களுக்கு சுபர் பெற்றோலும், 2.05 ரியால்களுககு டீசல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக கத்தார் எனர்ஜி (QatarEnergy) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fuel Price July

Also Read: கத்தார் தொண்டு நிறுவனத்திற்கு ( Qatar Charity) விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இலங்கை தீர்மானம்!

Leave a Reply