கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள “அவ்காப்”யின் முக்கிய அறிவித்தல்

அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்பட்ட பத்து நாட்களைக் கொண்ட துல் ஹஜ் மாதம் ஒரிரு நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு  கத்தார் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சான ”அவ்காப்” முஸ்லிம்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக ”அவ்காப்” விடுத்துள்ள அறிக்கையில்,

துல்-ஹிஜ்ஜாவின் முதல் 10 நாட்களின் போது, நற்கருமங்களை  செய்து மற்றும் இந்த வாய்ப்பை நன்மையின் பருவமாகப் பயன்படுத்திக் கொண்டு, உண்மையான மனந்திரும்புதலுடன்  அல்லாஹ்வை நாடுமாறு அனைத்து முஸ்லிம்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் துல் ஹஜ் மாதம் பிறை 9ம் திகதி பிடிக்கப்படும் அரபா தின நோன்பை நேற்பதோடு, ஐவேளைத் தொழுகைகளையும் முறையாக நிறைவேற்றி இறைவனிடம் நெருக்கத்பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சு தெரிவித்துள்ளது.

2022ம் ஆண்டுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் தினம் எதிர்வரும் ஜுலை மாதம் 9ம் திகதி கொண்டாப்படும் என்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also  Read: கத்தாரில் ஹஜ்ஜுப்பெருநாள் ஜுலை 9ம் திகதி கொண்டாடப்படும் – Qatar Calendar House அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *