Expat sentenced two weeks jail for insulting saleswoman
கத்தாரில் பெண் விற்பனையாளரை அவமதித்தவருக்கு இரண்டு வாரம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு அத்துடன் 5000 ரியால்கள் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கத்தாரின் சிமைஸ்மா பகுதியில் உள்ள வணிகக் கடையில் விற்பனைப் பெண்ணை அவமதித்த குற்றத்திற்காக தோஹா நீதிமன்றம் அரபு மொழி பேசும் வெளிநாட்டவர் ஒருவருக்கு இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
மேற்படி நபர் வணிகக் கடையில் சில பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்தும் போது, மொத்த தொகையானது அதிகம் என்பதாக காசாளரிடம், சண்டையிட்டு, தகாத வார்த்தைகளினால் திட்டியுள்ளதாக கத்தார் உள்ளூர் செய்தி நாளிதழான Arrayah தெரிவித்துள்ளது.
அந்த காசாளர் பொலிஸுக்கு வழங்கி புகாரின் அடிப்படையில் அங்குள்ள கண்காணிப்பு கெமராக்கள் பரிசோதனை செய்யப்பட்ட போது மேற்படி நபர் காசாளரை தகாத வார்த்தைகளைக் கூறி அவமதித்தமை நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர் இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனையுடன், 5 ஆயிரம் கத்தார் ரியால்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வர்த்தக அமைச்சின் விதிமுறைகளை மீறிய இரு வியாபார நிறுவனங்களை மூடிய கத்தார் அதிகாரிகள்