கத்தாரில் இலத்திரனியல் டெக்ஸிகளை அறிமுகப்படுத்துகின்றது கர்வா (மொவாசலாத்)

Qatar to inerduce Karwa city taxis with hybrid eco-taxis

கத்தாரில் பொதுகப் போக்குவரத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுவது கர்வா டெக்ஸிகளாககும். மேற்படி கர்வா டெக்ஸிகளை ஹைப்ரிட் இலத்திரனியல் டெக்ஸிகளாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கத்தார் பொதுப்போக்குவரத்திற்கு பொறுப்பாகவுள்ள மொவாசலாத் (கா்வா) நிருவாகம் தெரிவித்துள்ளது.

இந்த தொழில்நுட்பத்திற்கு மாறியவுடன் வாகனத்தின் அனைத்து செயற்பாடுகளும், இலத்திரனியல் சக்தியிலேயே செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால் தற்போது பாவனையில் உள்ள எரிபொருள் மூலம் சூழலுக்கு விடுவிக்கப்படும் 12 ஆயிரம் கிலோ கிராம் காபனீரொட்சைட்டு இல்லாமல் ஆக்கப்படும் என்பதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கத்தாரில் டோஹா நகரில் சூற்றுச் சூழலின் கார்பன் அளவு வெகுவாக குறையும் எனவும், இந்தத் திட்டமான முதன் முதலில் கத்தாரின் டோஹா நகரில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கர்வா நிருவாகம் தெரிவித்துள்ளது.
கத்தாரானது புதிய தொழில்நுட்பங்களுக்கு எப்போதும் முன்னரிமை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதேவேளை கத்தாரின் தேசிய விஷனில் (Qatar National Vision 2030) ஒன்றாக இலத்திரனியல்  வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் காணப்படுவதாக கர்வா குழுமத்தின் பணிப்பாளர் Fahad Saad Al Qahtani அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *